Women’s WC – DLS முறையில் 133 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து அணி
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 16வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
பாகிஸ்தானின் சிறந்த பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்கள் பெற்று இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
பல மணி நேர இடைவிடாத மழை காரணமாக நடுவர்கள் DLS (Duckworth–Lewis–Stern) முறையில் போட்டியை 31 ஓவர்களுக்கு மாற்றினர்.
இதை அடுத்து இறுதி 6 ஓவர்கள் விளையாடுவதற்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி 133 ஓட்டங்களை பெற்றனர்.
இங்கிலாந்து அணி சார்பில் சார்லி டீன் (Charlie Dean) 33 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
புள்ளி பட்டியலின் படி, இங்கிலாந்து அணி தோல்விகளே இன்றி வலுவாக உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணி எவ்வித வெற்றிகளும் இன்றி பட்டியலில் இறுதியில் உள்ளதால் இந்த போட்டி அவர்களுக்கு முக்கியமாக அமைந்துள்ளது.





