ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் (Jaisalmer) இருந்து ஜோத்பூருக்கு (Jodhpur) சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
57 பயணிகளுடன் வந்த பேருந்து ஜெய்சால்மர்-ஜோத்பூர் (Jaisalmer-Jodhpur) நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்துள்ளது.
3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து இந்திய பிரதமர் மோடி, “ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகவும் துயரமடைந்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
(காணொளி பதிவு மூலம் செய்தியை பார்வையிட)





