செய்தி விளையாட்டு

Women’s WC – மழை காரணமாக கைவிடப்பட்ட நியூசிலாந்து மற்றும் இலங்கை போட்டி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

அந்த வகையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 15வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 258 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன (Vishmi Gunaratne) 42 ஓட்டங்களும் சமரி அத்தபத்து (Chamari Athapaththu) 53 ஓட்டங்களும் ஹாசினி பெரேரா (Hasini Perera) 44 ஓட்டங்களும் இறுதியில் நிலக்ஷி டீ சில்வா (Nilakshi de Silva) 55 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து 259 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்க காத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

புள்ளி பட்டியலின் படி, நியூசிலாந்து 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டும் வென்று ஐந்தாம் இடத்திலும் இலங்கை அணி 4 போட்டிகளில் எவ்வித வெற்றியும் இன்றி ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!