இந்தியாவில் $15 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள கூகுள் நிறுவனம்
இந்தியாவில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் $15 பில்லியன் மதிப்பிலான தரவு மையத்தை (Data Center) அமைக்கவிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய செயற்கை அறிவு (AI) மையமான ஒரு மாபெரும் தரவு மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தளத்திற்காக (Artificial Intelligence Platform) கூகுள் அதானி குழுமத்துடன் இணைந்துள்ளது.
இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், AI உள்கட்டமைப்பு அதாவது AI பயன்பாடுகளை ஆதரிப்பதற்கான அதிநவீன கட்டமைப்புகள் மற்றும் பெரியளவிலான எரிசக்தி ஆதாரங்களை இயக்குவதற்குத் தேவையான அம்சங்களுடன் இந்த தரவு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை (Google CEO Sundar Pichai), பிரதமர் மோடியை சந்தித்து திட்டம் குறித்து விவரித்துள்ளார்.
கலந்துரையாடலை தொடர்ந்து, “இதன் மூலம் நாங்கள் எங்கள் தொழில்துறை முன்னணி தொழில்நுட்பத்தை இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு கொண்டு செல்வோம், AI கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துவோம் மற்றும் நாடு முழுவதும் வளர்ச்சியை உந்துவோம்” என்று சுந்தர்பிச்சை Xல் பதிவிட்டுள்ளார்.





