இரட்டை குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பெண்
ஹைதராபாத்தில் 27 வயது சல்லாரி சாய்லட்சுமி (Challari Sailakshmi) என்ற பெண் தனது இரண்டு வயது இரட்டை குழந்தைகளை கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேத்தன் கார்த்திகேயா (Chetan Karthikeya) மற்றும் லஸ்யதா வள்ளி (Lasyatha Valli) என அடையாளம் காணப்பட்ட இரட்டையர்களை தலையணையால் மூச்சி திணற செய்து கொலை செய்துவிட்டு பின்னர் ஹைதராபாத்தின் பாலாநகரில் உள்ள தனது நான்காவது மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், அவரது கணவர் அனில் குமார் வேலையில் இருந்துள்ளார்.
மன அழுத்தம் காரணமாக சாய்லட்சுமி இவ்வாறு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாய்லட்சுமியின் பெற்றோர் அனில் குமார் மீது புகார் அளித்துள்ளனர், மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாய்லட்சுமியும் அவரது கணவரும் தங்கள் மகன் சேத்தனின் பேச்சுப் பிரச்சினையால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.





