இணையத்தில் கசிந்த ட்ரம்ப், அல்பானீஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
அமெரிக்க தரவு நிறுவனம் ஒன்று தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி அனைவரும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த விடயத்தை அறிந்திருப்பதாக பதில் பிரதமர் ரிச்சர்ட் மார்ஸ் (Richard Marrs) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison), முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) மற்றும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோரின் வணிக தொலைபேசி எண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல தரப்பினரால் லிங்க்ட்இன் (LinkedIn) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் நிறுவனம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
உறுப்பினர்களின் தனிப்பட்ட தரவை அனுமதியின்றி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், இந்த விடயத்தில் நிறுவனத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் லிங்க்ட்இன் (LinkedIn)செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.





