காசா அமைதி மாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மக்ரோன் இடையிலான கைகுலுக்கல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையிலான சங்கடமான கைகுலுக்கல் சர்ச்சையாக மாறியுள்ளது.
எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் (Sharm El-Sheikh) நேற்று நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், அங்கிருந்த அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கைகுலுக்கல் என்பது சாதாரணமான விடயமாக இருந்த போதிலும், இரு நாட்டுத் தலைவர்களின் கைகுலுக்கள் விடயத்தில் மறைமுகமான ஆக்ரோஷம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ட்ரம்ப் – மக்ரோன் கைகுலுக்கல் விவகாரம் ஒரு மல்யுத்தத்தின் ஆரம்பத்தை பிரதிபலிப்பாக இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்த கைகுலுக்கல் இரு தலைவர்களுக்கும் இடையிலான ஒரு சாதாரண வாழ்த்துக்கு அப்பாற்பட்டதென உதடுகளின் அசைவுகளை படிக்கும் (lip reader) நிக்கோலா ஹிக்லிங் (Nicola Hickling) தெரிவித்துள்ளார்.
இந்த இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் உலகத் தலைவர்களுடன் மக்ரோன் ட்ரம்பை கேலி செய்த சம்பவத்தையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் பல்வேறு நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இந்தநிலையில், இந்த சம்பவம் இரு தலைவர்களிடையிலான மோதலை வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





