முன்னாள் பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவின் வீட்டுக் காவல் நீட்டிப்பு
முன்னாள் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் (Jair Bolsonaro) வீட்டு காவலை நீட்டிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் (Alexandre de Moraes) தீர்ப்பளித்துள்ளார்.
2022ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை பின்பற்றத் தவறியதற்காக போல்சனாரோ ஆகஸ்ட் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி பின்னர் ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததாக ஒரு தனி வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
போல்சனாரோவின் தண்டனையைத் தொடர்ந்து சில வாரங்களில், அவரது சட்டக் குழு அவரை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்குமாறு முறையாகக் கோரியது, அவர் தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுத்த விசாரணையில் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவித்தது.
ஆனால் வழக்கறிஞர்களின் வாதங்களை நிராகரித்த நீதிபதி மொரேஸ், வீட்டுக் காவல் “அவசியமானது மற்றும் பொருத்தமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.





