அமெரிக்காவில் தட்டம்மை நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 150க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள்
தென் கரோலினாவில் (South Carolina) தட்டம்மைக்கு ஆளான 150க்கும் மேற்பட்ட பாடசாலை குழந்தைகள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூ மெக்ஸிகோ (New Mexico) மற்றும் டெக்சாஸில் (Texas) பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரில் மூன்று பேர் உயிரிழந்த பிறகு, இந்த ஆண்டு தட்டம்மை அதிகரிப்பை சந்தித்த சமீபத்திய அமெரிக்க மாநிலம் தென் கரோலினா ஆகும்.
இந்த ஆண்டு இதுவரை அமெரிக்கா 1,563 நோயாளிகளை உறுதிப்படுத்தியுள்ளது, இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு தழுவிய அளவில் மிக உயர்ந்த நிலை என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள் தென் கரோலினாவின் ஸ்பார்டன்பர்க் கவுண்டியில் (Spartanburg County) உள்ள குளோபல் அகாடமி ஆஃப் சவுத் கரோலினா (Global Academy of South Carolina) மற்றும் ஃபேர்ஃபாரெஸ்ட் தொடக்கநிலை (Fairforest Elementary) பாடசாலை மாணவர்கள் ஆவர்.
தென் கரோலினாவை தவிர, உட்டா (Utah) மற்றும் அரிசோனாவில் (Arizona) நோய் தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன.





