INDvsWI Test – இந்திய அணிக்கு 121 ஓட்ட இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா (Feroz Shah Kotla) மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார்.
அந்தவகையில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.
இதனை தொடர்ந்து, தனது முதலாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இதனால் இந்தியாவை விட 270 ஓட்டங்கள் பின்தங்கி இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் (Follow-On) முறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி 390 ஓட்டங்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷாய் ஹோப் (Shai Hope) மற்றும் ஜான் கெம்பல் (John Campbell) சதம் அடித்தனர்.
இந்நிலையில், இந்திய அணிக்கு 121 ஓட்ட இலக்கை வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்தது.
இதனை தொடர்ந்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி நான்காம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ஓட்டங்கள் பெற்றுள்ளது.