இலங்கையில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது பிராந்திய மாநாடு!

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் 78வது பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாடு வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இதற்காக WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய இயக்குநர் டாக்டர் கத்தரினா போஹ்மே (Dr. Katharina Boehme) ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கூடுதலாக, சுகாதார அமைச்சர்கள் மற்றும் இரண்டு தூதர்கள் மற்றும் பிற WHO நிபுணர்கள் உட்பட எட்டு நாடுகளின் உறுப்பினர்கள் இந்த அமர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது 2026 ஆம் ஆண்டுக்கான பிராந்தியத்திற்கான சுகாதார நிகழ்ச்சி நிரலையும் தயாரிப்பார்கள்.
வலுவான ஆரம்ப சுகாதார சேவைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் புகையிலையை எதிர்த்துப் போராடுவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் அதிக கவனம் செலுத்தப்படும்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியை விரிவுபடுத்துவது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் விரிவான விவாதங்களை நடத்தி முடிவுகளை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.