காசாவில் போர் முடிந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
காசாவில் போர் முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் உச்சிமாநாட்டிற்காக எகிப்திற்கு செல்வதற்கு முன்னர் அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன் போர்நிறுத்தம் நிலைத்திருக்கும் எனவும் காசாவுக்காக விரைவில் ஒரு அமைதிக் குழு (Board of Peace) அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காசா தற்போது ஒரு சிதைவுப்பகுதி போல தெரிகிறது என அவர் குறிப்பிட்டார்.
மேலும் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கட்டார் ஆகியவற்றின் பங்களிப்பையும் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டினார்.
(Visited 11 times, 1 visits today)




