வரலாற்று சிறப்புமிக்க இத்தாலிய மடாலயத்தில் தீ விபத்து

வடக்கு இத்தாலியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பெர்னாகா மடாலயத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து 22 கன்னியாஸ்திரிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
1628ம் ஆண்டு நிறுவப்பட்ட மிலனுக்கு அருகிலுள்ள லா வாலெட்டா பிரையன்சாவில் உள்ள மடாலயத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கன்னியாஸ்திரிகள் காயங்கள் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர், ஆனால் பல விலைமதிப்பற்ற கலைப்படைப்புகள் அழிந்து போனதாக இத்தாலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
லா வாலெட்டா பிரையன்சாவின் மேயர் மார்கோ பன்செரி, இது “ஒரு பேரழிவு, கணக்கிட முடியாத சேதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)