பாகிஸ்தானின் சோதனைச் சாவடிகள் மீது தலிபான் தாக்குதல் – எல்லையில் பதற்ற நிலை
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியதை அடுத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், பல எல்லைச் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் தலிபான்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளும் மோதல்களை உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் தாக்குதல்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் தங்கள் பிரதேசத்தில் நடத்தும் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் குறிப்பிட்டுள்ளது.





