புனேவிலிருந்து வந்த ஆகாசா ஏர் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு

புனேவிலிருந்து புறப்பட்ட ஆகாசா (Akasa) ஏர் விமானம் மீது பறவை மோதியதில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
“புனேவிலிருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லிக்குச் சென்ற அகாசா ஏர் விமானம் QP 1607 மீது பறவை மோதியது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, அனைத்து பயணிகளும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்,” என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விமானம் பொறியியல் குழுவால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்றும் முழுமையான ஆய்வுக்குப் பிறகு சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு முதல் 20 முக்கிய விமான நிலையங்களில் 2,000க்கும் மேற்பட்ட பறவைகள் மோதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2025ம் ஆண்டில் இதுவரை 641 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.