இலங்கை – 2000 மலையக மக்களுக்கு வீட்டு உரிமை சான்றிதழ்களை வழங்கும் அரசாங்கம்!

இந்திய உதவியுடன் செயல்படுத்தப்படும் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைச் சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நாளைய தினம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற கருப்பொருளின் கீழ் இந்த வீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
தோட்ட சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவது மட்டுமல்லாமல், தாய்நாட்டிற்கு ஆற்றலை வழங்கும் “மதிப்பிற்குரிய குடிமகனாக” மாற்றுவது இதன் நோக்கமாகும்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்தா வித்யாரத்ன, துணை அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.