இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
39 கிராம் ஹெரோயின் தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர் தொட்டலக கண்ணாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், கணபதி கணேஷ் எனப்படும் தொட்டலக கண்ணா மீது 2014 டிசம்பர் 26 ஆம் திகதி சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தலைமறைவாக இருந்ததால், அவர் ஆஜராகாமலேயே விசாரணை நடத்தப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசு தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அவரைக் கைது செய்து தண்டனையை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.





