பாகிஸ்தானில் காவல்துறை பயற்சி மையத்தின் மீது தாக்குதல் – 13 பேர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல்துறை பயற்சி மையத்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 07 காவல்துறை அதிகாரிகளும் 06 போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் சமீபகாலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. போராளிகள் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளின் இருப்பிடமாக பாகிஸ்தான் அமைந்திருப்பதாகவும் பல நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
காவல்துறையினரின் அறிக்கையின்படி , தாக்குதல் நடத்தியவர்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கொல்லப்பட்ட அதிகாரிகளின் துணிச்சலுக்கும், தியாகத்திற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)





