ஐரோப்பா செய்தி

செபாஸ்டின் லெகோர்னுவை (Sebastien Lecornu) மீண்டும் பிரதமராக நியமித்த பிரான்ஸ் ஜனாதிபதி

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், செபாஸ்டியன் லெகோர்னுவை (Sebastien Lecornu) மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார்.

பதவியேற்ற 26 நாட்களுக்கு பிறகு, திங்களன்று அதே பதவியில் இருந்து விலகிய லெகோர்னு, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல நாட்கள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமராகிறார்.

புதிய அமைச்சரவையை அமைக்கும் பணியை லெகோர்னுவிடம் ஒப்படைத்துள்ளதாக மக்ரோனின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்த ஆண்டு இறுதிக்குள் பிரான்சுக்கு ஒரு வரவு செலவு திட்டத்தை வழங்கவும், நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய குடியரசுத் தலைவர் எனக்கு ஒப்படைத்த பணியை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று லெகோர்னு Xல் பதிவிட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி