Womens WC – தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்து 50 ஓவர்கள் முடிவில் 227 ஓட்டங்கள் பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் சோபி டெவைன் 63 ஓட்டங்களும் புரூக் ஹாலிடே 69 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
இதையடுத்து, 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி நியூசிலாந்து வீராங்கனைகளின் அதிரடி பந்துவீச்சால் 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.
இதன்மூலம் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.