மொழிகளைப் பாதுகாக்க அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவி
அதற்கமைய, ஆதி வாணி என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவி கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கருவியை பழங்குடியினர் விவகார அமைச்சு, பல கல்வி நிறுவனங்கள் மற்றும் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.
ஆதி வாணி கருவியின் மூலம், ஒரு பழங்குடி மொழியில் பேசப்படும் தகவலை, இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து அதன் பொருள் அறிய முடியும்.
இதன் மூலம் பழங்குடியினர் மற்றும் பொது மக்களுக்கு இடையே உரையாடல் எளிமையாகும்.
தற்போது இந்தியாவில் 461 பழங்குடி மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில், 81 மொழிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. 42 மொழிகள் இன்றே இல்லாமல்போகும் அபாயத்தில் உள்ளன.
இந்த சூழலில், பழங்குடியினரின் மொழி, மரபு மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும், அனைவரும் பங்கேற்கும் நிர்வாகத்தைக் கட்டமைக்கவும், ஆதி வாணி போன்ற கருவிகள் மிகவும் முக்கியமானவை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் சேர்க்கப்பட்ட மொழிகளாக, சந்தாலி (Santali, பிலி (Bhili) உள்ளது. அடுத்த கட்டத்தில், குய் (Kui), காரோ (Garo) போன்றவை இடம்பெறவுள்ளன.
அத்துடன், மறைந்து போகும் மொழிகளை பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகளாவிய முயற்சியில் இந்தியா முன்னணி நாடாக இருக்க வேண்டும் என்பதையும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.





