அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு – நம்பிக்கையை இழந்த ட்ரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கையை இழந்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளன.
இந்நிலையில், தங்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுமா என ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், வேறு எந்தத் தலைவரும் செய்யாத அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதும் தனக்கு நோபல் பரிசு வழங்காமல் இருப்பதற்கு பரிசு வழங்கும் குழுவினர் ஏதாவது காரணத்தைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எந்த அடிப்படையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது எனவும் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.