இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து 29 தொலைபேசிகள் மீட்பு!
இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் சிலர் தங்கியுள்ள பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி வார்டுகளில் இருந்து 29 கையடக்க தொலைபேசிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு (STF) நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட தொலைபேசிகள் பிரபல மற்றும் உயர்மட்ட குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான தெமட்டகொட சமிந்தவின் அறையில் ஒரு தொலைபேசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வேல சுதா’ மற்றும் மற்றொரு பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிடிகம ருவான்’ ஆகியோரின் அறைகளிலும் தொபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.





