2025ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இன்றைய தினம் 2025ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகவா (Susumu Kitagawa), இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு ராப்சன் (Richard Robson), ஜோர்டானை சேர்ந்த ஒமர் யாகி (Omar M. Yaghi) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
காபன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
88 வயதான ராப்சன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், 74 வயதான கிடகாவா, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்திலும், 60 வயதான யாகி, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களாக பணிபுரிகின்றனர்.
இதுவரை மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.