இலங்கையில் தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் தற்போது பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் பயணிக்கும் எந்தவொரு பயணியும் தங்கள் வங்கி அட்டையைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனக் கூறியுள்ளார்.