ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் குழந்தை பாலியல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி சகோதரர்களுக்கு சிறைத்தண்டனை

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி நபர் ஒருவருக்கு கிழக்கு லண்டன் நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது சகோதரருக்கும் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காக 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு, 26 வயதான வ்ருஜ் படேல் மற்றும் அவரது சகோதரர் கிஷன் படேல் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

படேல் சகோதரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் இருக்கலாம் என்று தெரிவித்த காவல்துறையினர் தற்போது மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

“வ்ருஜ் படேல் ஒரு கோழைத்தனமான, சந்தர்ப்பவாத குற்றவாளி, அவர் தனது சொந்த பாலியல் திருப்திக்காக குழந்தைகளை இரையாக்கியுள்ளார்” என்று கிழக்கு லண்டன் நீதிபதி தெரிவித்து தண்டனையை அறிவித்துள்ளார்.

காவல்துறை அறிக்கையின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தல், தாக்குதல் மற்றும் பாலியல் செயலில் ஈடுபட வைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை வ்ருஜ் படேல் ஒப்புக்கொண்டுள்ளார்

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி