நெதர்லாந்தில் பறவை காய்ச்சல் அபாயம் – 71000 கோழிகளை கொல்ல நடவடிக்கை!

நெதர்லாந்தில் பறவை காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில் 71,000 கோழிகளை கொல்ல உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கு பிறகு நெதர்லாந்தில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு கோழிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பண்ணையிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் ஆறு கோழிப் பண்ணைகள் அமைந்துள்ளன. நெதர்லாந்து உணவு மற்றும் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் (NVWA) அவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரித்துள்ளது.
10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள 25 பண்ணைகளுக்கு NVWA போக்குவரத்துத் தடையையும் விதித்தது. இந்தப் பண்ணைகளிலிருந்து எந்த விலங்குகள், முட்டைகள், உரம் அல்லது கழிவுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)