கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதியான விசாரணைக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய த.வெ.க!
கரூர் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கரூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளை முன்னெடுத்த நீதிமன்றம் தமிழக வெற்றிக்கழகத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதுடன், பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து சிசிரிவி காட்சிகளை கைப்பற்றவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பல குறைகள் இருப்பதாக தமிழ் நாட்டு மக்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தொடர்புடைய வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக வெற்றிக் கழகம் மனு தாக்கல் செய்திருந்தது.
இருப்பினும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த சூழலில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





