ஆசியா செய்தி

இந்தோனேசியா பாடசாலை கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் சிடோர்ஜோ நகரில் உள்ள அல்-கோசினி இஸ்லாமிய பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

“இன்று மீட்புப் பணிகளை முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் உடல்களை குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை செயல்பாட்டு இயக்குநர் யுதி பிரமந்தியோ குறிபிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இந்த ஆண்டு இதுவரை இந்தோனேசியாவில் நடந்த மிக மோசமான பேரழிவு என்று தேசிய பேரிடர் அமைப்பின் (BNPB) துணைத் தலைவர் புடி இரவான் தெரிவித்துள்ளார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, தரமற்ற கட்டுமானம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி