ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!
காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவில் அமைதியைக் கொண்டுவருவது தொடர்பில் பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஹமாஸ் இஸ்ரேலில் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையில் திடீரென நேற்று தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் பட்டினியால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் தாக்குதல் முந்தைய வாக்குறுதிகளை புறக்கணித்துள்ளது. இந்நிலையில் காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





