இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பலி
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை(05) சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் (trauma center) ஏற்பட்ட மின்சார கோளாறால் தீப்பற்றியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தின் போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 13 பேர் அருகிலிருந்த நோயாளிகள் தங்குமிடத்தில் இருந்தனர்.
தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது நோயாளிகள் தங்குமிடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவது சிரமமாக இருந்ததாக தீயணைப்பு வீரர் ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் கட்டடத்தின் எதிர்ப் பக்கத்தில் இருந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சியடிக்க வேண்டியிருந்தது,” என தெரிவித்தார்.
ஒன்றரை மணிநேரத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.





