செய்தி

பராகுவேயில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துக்கொண்ட 600 ஜோடிகள்!

பராகுவேயில் நேற்று 600 இற்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

“அன்பால் ஒன்றிணைக்கப்பட்டு சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது” என்று அழைக்கப்படும் பிரச்சாரத்தின் கீழ் இந்த திருமணங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் முதல் திருமண உறவில் இருந்து விடுபட்டு மறு திருமணத்திற்காக காத்திருந்த பலரும் புதிய பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திருமண விழாவிற்கு அவர்களுடைய குழந்தைகளும் வந்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை இதற்கு முன்னதாக Ciudad del este  என்ற பகுதியில் 120 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அதேபோல் Boquerón பகுதியில் பழங்குடியினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி