இந்தோனேசியா பாடசாலை கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிடோர்ஜோ நகரில் உள்ள அல்-கோசினி இஸ்லாமிய பாடசாலை திங்கட்கிழமை இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். ஆரம்பத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தேசிய பேரிடர் தணிப்பு முகமை (BNPB) தலைவர் சுஹார்யந்தோ, மீட்புப் பணியாளர்கள் மேலும் ஒன்பது உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “காணாமல் போன 49 பேரை நாங்கள் தேடி வருகிறோம்,” என்றும் சுஹார்யந்தோ தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)





