கம்போடிய எதிர்க்கட்சி அரசியல்வாதியை கொன்ற தாய்லாந்து நபருக்கு ஆயுள் தண்டனை
பாங்காக்கில் கம்போடிய எதிர்க்கட்சி அரசியல்வாதியைக் கொன்றதற்காக தாய்லாந்து நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவின் முன்னாள் எதிர்க்கட்சி அரசியல்வாதியான பிரெஞ்சு நாட்டவர் லிம் கிம்யா, ஜனவரி 7ம் திகதி முன்னாள் கடற்படை வீரரான எக்கலக் பேனோய் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லிம் கிம்யா தனது மனைவி மற்றும் சகோதரருடன் பாங்காக்கிற்கு வருகை தந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடந்த ஒரு நாளுக்குப் பிறகு எக்கலக் பேனோய் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு எக்கலக் பேனோய் 1.79 மில்லியன் பாட் ($55,162) இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)





