ஐரோப்பா

சுவிஸில் ஆபத்தாக மாறும் காய்ச்சல் தொற்று – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

சுவிட்ஸர்லாந்தின் அனைத்து இடங்களிலும் இப்போது இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகின்றது.

எனினும் பல வைரஸ்கள் மக்களிடையே பரவி வருகின்றன. பாரைன்ப்ளூயன்சா, ஆர்எஸ் வைரஸ்கள் மற்றும் ரைனோவைரஸ்கள் அனைத்தும் சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை தூண்டுகின்றன.

கொரோனா வைரஸ் SARS-CoV-2 தொற்றுநோய் பரவலும் உள்ளது. தற்போது அதிக காய்ச்சலுடன் படுக்கையில் இருக்கும் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த முறை மற்ற ஆண்டுகளை விட கடுமையான காய்ச்சல் அலை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் காய்ச்சல் அலையாக எப்போது சுவிட்சர்லாந்தைத் தாக்கும் என்பதை சரியாகக் கணிக்க முடியாதென பொது சுகாதாரத்திற்கான கூட்டாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலும் காய்ச்சல் அலை டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையில் தொடங்குகிறது. ஜனவரியில் தீவிரம் அடைகிறது.

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும். இது மூத்தவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதியளிக்கிறது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்