க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடக்கும் எந்த நிலையத்திற்குள்ளும் வெளி தரப்பினர் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை நேற்று (29) ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியதோடு நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
(Visited 14 times, 1 visits today)