இலங்கையில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கையின் – ஹிங்குராங்கொட பகுதியில் சுமார் 45 மாணவர்கள் திடீரென சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பக்கமுனாவில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த உணவு விஷமானதை தொடர்ந்து மாணவர்கள் சுகவீனம் அடைந்ததாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகள் வீடு திரும்பிய பின்னரே அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பக்கமுனா பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் மொத்தம் 230 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் அவர்கள் அனைவருக்கும் ஒரே உணவே பரிமாறப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பக்கமுனா பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





