பிலிப்பைன்ஸில் உலுக்கிய நிலநடுக்கம் – 26 பேர் பலி – 147 பேர் படுகாயம்
மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
செபு நகர கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், மேலும் 147 பேர் காயமடைந்தாகவும் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசாயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறப்பு எண்ணிக்கை உயரும் என்றும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 16 times, 1 visits today)





