பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதர் பாரிஸில் மரணம்
பிரான்சுக்கான தென்னாப்பிரிக்க தூதர் பாரிஸின் மேற்கில் உள்ள ஹயாட் ரீஜென்சி ஹோட்டலின் அடிவாரத்தில் உயிரிழந்து கிடந்ததாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
58 வயதான தூதர் என்கோசினாதி இம்மானுவேல் நாதி ம்தேத்வா டிசம்பர் 2023ல் நியமிக்கப்பட்டதிலிருந்து பிரான்சுக்கான தூதராகப் பணியாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் ம்தெத்வா காணாமல் போனதாக அவரது மனைவியால் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ம்தெத்வாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுத் துறை ம்தெத்வாவின் மரணத்தை உறுதிப்படுத்தியது, சம்பவம் குறித்து பிரெஞ்சு அதிகாரிகளால் விசாரிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)





