ஐரோப்பா

ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அனைத்து சிவிலியன் ட்ரோன்களுக்கு தடை செய்த டென்மார்க்

கோபன்ஹேகனில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களின் கூட்டத்தைப் பாதுகாக்கவும், சந்தேகத்திற்கிடமான ட்ரோன் காட்சிகள் அதிகரித்து வருவதால், காவல்துறை மீதான சுமையைக் குறைக்கும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை நாடு தழுவிய அனைத்து சிவிலியன் ட்ரோன் விமானங்களை தற்காலிகமாக தடை செய்வதாக டென்மார்க் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இத் தற்காலிகத் தடை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நீடிக்கும், மேலும் அதிகாரிகள் உச்சிமாநாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வேளையில், சட்டப்பூர்வ விமானங்களுக்கும் மற்றும் சாத்தியமான விரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும் இந்த தடை அமையும் என்று போக்குவரத்து அமைச்சர் தாமஸ் டேனியல்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பணி ட்ரோன்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படலாம். தனியார் நிகழ்வுகளுக்கான வான்வழி புகைப்படம் எடுத்தல் போன்ற சாதாரண வணிக அல்லது பொழுதுபோக்கு விமானங்களுக்கு அனுமதி இருக்காது. இராணுவம், காவல்துறை மற்றும் பிற அவசர சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் . இவற்றை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று டென்மார்க் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் அக்டோபர் 1 ஆம் திகதி கோபன்ஹேகனில் கூடி ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவை மையமாகக் கொண்ட ஒரு முறைசாரா கூட்டத்திற்கு வருவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் டென்மார்க் விமான நிலையங்கள் மற்றும் இராணுவ வசதிகள் மீது ட்ரோன்கள் பறந்ததாக பல அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்