விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில், அதில் தவெக தலைவர் விஜய் கைகளை உயர தூக்கியுள்ள நிலையில் அவரது கைகளில் இருந்து ரத்தம் வடிவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் “தமிழக அரசே அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய் – தமிழ்நாடு மாணவர் சங்கம்” என அச்சிடப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்தப் போஸ்டர் நகர் முழுவதும் பரவலாகப் பல இடங்களிலும் தென்படுகிறது.





