ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதிக்கான மின்சாரம் துண்டிப்பு!
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதிக்கான வெளிப்புற மின்சாரம் மூன்று நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்படும் என்ற அச்சம் எழுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் தனது பிடியை வலுப்படுத்த புடின் ஒரு நெருக்கடியை உருவாக்க இலக்கு வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே “ரஷ்யா அணுமின் நிலையத்தை ஒரு பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்துகிறது” என்று உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 2022 இல் ரஷ்ய துருப்புக்கள் ஆலையின் கட்டுப்பாட்டைப் பெற்றன, அதன் உலைகள் சுமார் 4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





