கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய அம்சம் அறிமுகம்
கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஷிரந்த பீரிஸ் அறிவித்தார்.
அடுத்த ஆண்டுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் ஊடகங்களுக்கு உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் கொழும்பு தாமரை கோபுரத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஷிரந்த பீரிஸ் கூறியுள்ளார்.
மேலும் 2024 ஒக்டோபர் 7ஆம் திகதி மாணவியொருவர் உயிரிழந்த துயர சம்பவத்தையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.





