AsiaCup – பாகிஸ்தானுக்கு எதிராக 133 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 134 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழக்கும்.
(Visited 4 times, 1 visits today)