பஹ்ராம் விமானத் தளத்தின் ஒரு அங்குலத்தையேனும் தர முடியாது – டிரம்பிற்கு பதிலடி

ஆப்கானிஸ்தானில் உள்ள பஹ்ராம் விமானத் தளத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு தலிபான்கள் பதிலளித்துள்ளனர்.
பஹ்ராம் விமானத் தளத்தில் ஒரு அங்குலத்தையேனும் தர முடியாது என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது.
அத்துடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பஹ்ராம் விமானத் தளத்தில் மீண்டும் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதனால், பஹ்ராம் விமானத் தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் விரைவில் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், ட்ரம்பின் எச்சரிக்கையை, தலிபான் அரசு நிராகரித்துள்ளது.
அதற்கமைய, எந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலமும், ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது என, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.