கணவரின் கொள்கைக்காக கொலையாளியை மன்னித்த சார்லி கிர்க்கின் மனைவி

அமெரிக்க வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க்கின் மனைவியான 36 வயது எரிகா கிர்க், கணவரின் நினைவு நிகழ்வில் ஆற்றிய உரையில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
“என் கணவர் சார்லி, இளைஞர்களை காப்பாற்ற விரும்பினார், ஆகையால் அந்த மனிதர், அந்த இளைஞனை நான் மன்னிக்கிறேன்” என்று அரிசோனாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட 60,000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
31 வயதான சார்லி கிர்க், செப்டம்பர் 10 அன்று உட்டா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பொது விவாத நிகழ்வின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 22 வயது டைலர் ராபின்சன், வெறுப்பை பரப்பியதற்காக கிர்க் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
கிர்க் திருநங்கைகள், முஸ்லிம்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிறர் உட்பட சிறுபான்மையினரை குறிவைத்து அடிக்கடி கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு பல விமர்சனங்களை பெற்றவர்.