அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் திரைப்பகிர்வு (Screen Sharing) வசதியை விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் கொண்டுவர இருக்கிறது.

Whatsapp எப்போதும் அதிக அம்சங்கள் நிறைந்த செயலியாக வைத்திருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் எளிமையாக உபயோகப்படுத்துதல் இவற்றை கருத்தில் கொண்டு அவ்வப்போது Whatsappஇல் புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

இதன்படி மெட்டா நிறுவனம் அதன் தளமான Whatsappஇல், புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. WABetaInfo இன் அறிக்கையின்படி மெட்டா நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஒரு புதிய அம்சத்தை (பீட்டா) சோதனை செய்து வருகிறது, அதாவது கூகுள் மீட் மற்றும் ஜூம்(Zoom) போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் இருப்பது போல் பயனர்கள் தங்களது ஸ்கிரீன்களை ஷேர் செய்ய முடியும்.

Screenshareoption

Whatsappஇல் வீடியோ அழைப்பு வசதி நீண்டகாலமாக இருக்கிறது, சமீபத்தில் கூட வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணைப்பில் இருக்கும்படியான அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால் அதிலும் திருப்தி அடையாத மெட்டா நிறுவனம் தற்போது பயனர்களுக்கு ஸ்க்ரீன் ஷேரிங் வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

கூகுள் மீட் மற்றும் ஜூம் போன்ற செயலிகளில், வீடியோ அழைப்பில் பயனர்கள் தொடர்பில் இருக்கும் போது, மற்ற பயனர்களுக்கு தங்களது (மொபைல்/கணினி) திரையில் இருப்பதை பகிர்வதற்கு இது போன்ற ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் இருக்கும், தற்போது வாட்ஸ்அப்பிலும் அதே போன்று பயனர்கள் தங்களது மொபைல் திரையைப் பகிர்வதற்கு ஒரு புதிய அம்சத்தை மெட்டா சோதனை செய்து வருகிறது.

பெரும்பாலும் கொரோனா காலகட்டத்தின் போது பெரும் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்த படி வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியது, அத்தகைய சமயத்தில் வீடியோ அழைப்புகள் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இணைப்பில் அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை இதுபோன்ற ஸ்க்ரீன் ஷேரிங் வசதி வழியாக அனைவரும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsapVC

தற்போது அதேபோல் Whatsappஇல் ஸ்க்ரீன் ஷேரிங் செய்வதற்கு பயனர்கள் அழைப்பைத் தொடங்கியவுடன், இடதுபக்கம் கீழ்முனையில் உள்ள ஸ்கிரீன் ஷேர் விருப்பத்தைத் தேர்வு செய்து தங்களது திரையில் இருப்பதை பகிர்ந்து கொள்ளலாம். ஸ்க்ரீன் ஷேரிங் தொடங்கியவுடன் திரையில் நாம் பார்க்கும்/செய்யும் அனைத்தையும் (குறிப்பாக குறுஞ்செய்திகள், கடவுச்சொற்கள், தொலைபேசி எண்கள், போட்டோக்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள்) மற்றவர்களும் பார்க்கமுடியும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இரு தரப்பிலும் வாட்ஸ்அப்பை அப்டேட்டில் வைத்திருந்தால், மட்டுமே வாட்ஸ்அப் திரைப் பகிர்வு வேலை செய்ய வாய்ப்புள்ளது. தற்போது, இந்த அம்சம் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது மற்றும் அடுத்த சில வாரங்களில் வாட்ஸ்அப்பில் இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/WABetaInfo/status/1662371053153157120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1662371053153157120%7Ctwgr%5E25b4bd59155a7c92e66ac787f8831b49664654d2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fdinasuvadu.com%2Fnow-screen-sharing-facility-on-whatsapp-too-new-feature-coming-out-soon%2F

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்