மொரட்டுவை கடற்கரையில் நிர்வாணக்கோலத்தில் கரையொதுங்கிய ஆணின் உடல்

மொரட்டுவ-எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதரவில் உள்ள ஜெயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாணமாக ஒரு சடலம் கரை ஒதுங்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எகொட உயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 50-60 வயதுக்குட்பட்ட ஆண் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(Visited 9 times, 1 visits today)