யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு பகுதியில் இருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.
சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமையப்பெறவுள்ள காணிக்குள் இருந்து T-56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)