நெதர்லாந்தில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிசார் மோதல்

நெதர்லாந்தின் ஹேக்கில் நடந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க டச்சு காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர் பீரங்கியையையும் பயன்படுத்தியதாக உள்ளூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தேசியத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் புகலிடம் கோருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலதுசாரி ஆர்வலர் ஒருவர் ஏற்பாடு செய்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஏராளமான போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் வன்முறையில் மோதினர், கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வன்முறை குறித்து தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சியின் (PVV) தலைவர் கீர்ட் வைல்டர்ஸ், “நெடுஞ்சாலையைத் தடுப்பதும், காவல்துறையை எதிர்ப்பதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார்.